கோவையில் தென்மேற்கு பருவமழை.. 30 ஆண்டுகள் கால சராசரி மழையளவு இயல்பை விட கூடுதல் பதிவு..!

கோவை:  தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழைபெய்து வருகிறது.பல மாவட்டங்களில்
இயல்பை விட அதிகளவில் மழை பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ என மொத்தம்
211 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,
பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் 10 மி.மீ வரை மட்டுமே மழை பதிவானது.
பின்னர், ஜூலை மாதம் 2-வது வாரத்தில் பருவமழை தீவிரமடைந்தது. ஆகஸ்ட் முதல்
வாரத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. பின்னர், மீண்டும் தற்போது
பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி
அணை, கோவை குற்றாலம், சின்னாறு, பெரியாறுகளில் தண்ணீர் வரத்து
அதிகரித்துள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர்
சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து
வி டப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தென்மேற்கு பருவமழையின் 30 ஆண்டுகள் கால சராசரியின் மழையளவான 210 மி.மீ மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது. இயல்விபை விட அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. 20 நாட்களில் மொத்தம் 225 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்கும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், இன்னும்
கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதே சராசரி அளவை விட
அதிகளவில் மழை கிடைத்துள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம்,
சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளை விதைக்க சரியான நேரம் என வேளாண்
அதிகாரிகள் தெரிவித்துள்னார்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தின் தலைவர்
ராமநாதன் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. தென்
மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட
பகுதிகளிலும் அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. இப்பகுதியில் உள்ள
விவசாயிகள் ஒரு போகம் மட்டுமே நெற்பயிர் விதைப்பில் ஈடுபடுவர். அந்த வகை
யில், தற்போது பெய்துள்ள மழையால், அவர்கள் 135 நாட்கள் நெற்பயிரான ஆடு
துறை 39, 38 மற்றும் கோ-50, சி.ஆர்-1009 ரகங்கள் பயிரிடலாம்.
225 மி.மீட்டர் கோவை மாவட்டத்தில் பருவ மழை முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தற்போதே சராசரி மழை அளவை கடந்துள்ளது. தற்போது வரை 225 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கும் மழை பெய்யும் வாய்ப்பு
இருக்கிறது. பருவ மழை எதிர்பார்த்தைவிட அதிகளவில் பெய்து வருகிறது. இதனை
விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.