கோவை மாவட்டம் வால்பாறை கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் சத்யராஜ் ( வயது 31 ) கூலி தொழிலாளி .இவருக்கு கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி இவரை விட்டு பிரிந்து மைல்கல்லில் உள்ள அவரது பெற்றோர் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கல்லாபுரம் , ஏழூர் சந்திப்பில் வசிப்பவர் செல்வராஜ் ( வயது 62) விவசாயி .நேற்று இவர் கல்லாபுரம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
கோவை சிங்காநல்லூர் நேரு பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லி ன் பின்புறம் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவருக்கு 50 வயது இருக்கும். அவரது தலையில் காயம் இருந்தது. அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து சவுரிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ( பொறுப்பு ) நிர்மலா சிங்காநல்லூர் ...
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. யானையின் வாய் பகுதியில் காயம் ...
கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாபு (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவன்-மனைவி ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இது நாளடைவில் அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ...
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது ...
கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழைபெய்து வருகிறது.பல மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ ...
வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 16 கோடி டாலா் (சுமாா் ரூ.1,273 கோடி) நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகளை ஐ.நா.கோரியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் மீது பருவமழை இரக்கமற்ற தாக்குதலை ...
கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலை, விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த ...
கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் கிருத்திகா( வயது 19) ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளார் .தற்போது இவர் நடன வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் நேற்று நடன வகுப்புக்கு சென்ற கிருத்திகா வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை சின்னதுரை சிங்காநல்லூர் போலீசில் புகார் ...












