கோவை: கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ, நிதி திரட்டும் வகையில் கோவையில் மராத்தான் போட்டி, வரும் 11-ந் தேதி நடக்கிறது.இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்க, 16 ஆயிரத்து 500 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறுவர்களுக்கு, 5கி.மீ., 10கி.மீ., மற்றும் 21கி.மீ., ஆகிய 3 பிரிவுகளில், போட்டி நடத்தப்படுகிறது. ...
கோவை துடியலூரை அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை குட்டியுடன் 2 யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை வெளியே இழுத்து தின்றன. இதுகுறித்து ...
தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த ...
பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை ...
பெங்களூரு: மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி, அம்மாநில வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்னை நீண்ட காலமாக நீடிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா ...
காஷ்மீரின் கிறிஸ்த்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட மார்வா பகுதியில் நேற்று ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்குண்டு- நவபாச்சி என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கே படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இரண்டு கையெறி ...
கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள் – கோவையில் வெளியான பரபரப்பு காட்சிகள் கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை, வரப்பாளையம் , பொன்னூத்து உள்ளிட்ட கிராமங்களில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் காட்டு ...
கோவை அருகே உள்ள இருகூர், டி. எஸ் .கே .நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவிதா( வயது 45)இவர் நேற்று அங்குள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று விட்டது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார்.மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) நகைத் தொழிலாளி.இவரது மனைவி காயத்ரி (வயது 29) இவர்கள் இருவருக்கும் கடந்த 75 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் காயத்ரி தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம். கடந்த 10-ந் தேதி கணவரிடம் சொல்லாமல் காயத்திரி ...
கோவை சாய்பாபா காலனி சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மனோஜ் குமார் (வயது 23) இவர் நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் மனோஜ் குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...













