காஷ்மீரின் கிறிஸ்த்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட மார்வா பகுதியில் நேற்று ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சர்குண்டு- நவபாச்சி என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கே படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இரண்டு கையெறி குண்டுகள், ஒரு டெட்டனேட்டர், ஏ .கே துப்பாக்கி தோட்டாக்கள், எந்திர துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி என ஏராளமான வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன . உடனடியாக அவற்றை கைப்பற்றிய வீரர்கள் பயங்கரவாதிகளின் அந்த வரைபடத்தை அழித்தனர் . இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply