கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ தேசிய ...

கோவை: காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். ...

கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் ரத்தினபுரி பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை செல்வபுரம் வடக்கு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாசானம் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது கல்லமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாசானத்திற்கு ...

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் ...

கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி சரஸ்வதி (33). இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சரஸ்வதி அவரது கணவர் செந்தில்குமாரும் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுடலைக்கண்ணு (42) என்பவர் வீட்டின் உரிமையாளர் ராமசாமியிடம் சரஸ்வதியின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம ...

கோவை : சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-வது நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சிக்னலில் தனியார் தொண்டு நிறுவனம் மாநகர போலீசாருடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ...

கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள்வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகளை தனித்தனி குவியல்களாக கொட்டி தரம் பிரிக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனால் அந்த ...

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றார். மேலும், அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித் பல்திஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு ஜம்மு ...