அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ...

வீட்டு வேலைக்கு என்று சொல்லி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அடிமைபோல் அடைத்து வைத்து கொடுமை செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் அங்கு மாட்டியுள்ளனர் எனவும் மஸ்கட்டில் இருந்து தாயகம் திரும்பிய பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப வறுமை ...

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் காச நோய் பாதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள்பட்ட பெருந்தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிகளவில் பரவ கூடியது என்ற நிலையில், 1962 ...

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மலேசியாவில் இருந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...

மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதே வேளையில், பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது. 16 க்கும் மேற்பட்ட பசுக்களையும் அவற்றின் சந்ததியினரையும் உட்காரவோ, உண்ணவோ, குடிக்கவோ முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நிரம்பிய லாரியில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக ...

கோவையில் பண்ணையில் கோழியை பிடித்து சென்ற சிறுத்தை: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ...

புதுடெல்லி: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் கடற்படை ...

உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. ...

கோவை கணபதி, மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19 இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன் தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு ...

கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ...