கோவை செல்வபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகள் சக்தி மகேஸ்வரி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வரதராஜபுரம், திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவரது வீட்டில் மாடியில் இருந்து குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...
கோவையில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது போலீஸ் கமிஷனருக்கு தெரிய வந்தது. இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டது. இதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.ஹெல்மெட் அணியாமல் யார் வாகனம் ஓட்டினாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து போலீசார் ...
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி என்று எல்லாம் நம் பள்ளிகளில் நாம் படித்திருப்போம். குமரிக்கு கீழே இருந்த லெமுரியா கண்டம் தான் உலகின் முதல் மனிதன் பிறந்த இடம் அங்கிருந்து தான் ஆப்பிரிக்க புல்வெளிகளுக்கு போனான் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இதையெல்லாம் பொய் என்று உரைக்கும் ...
எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ...
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘நமது பொருளாதார நிலை கற்பனை செய்ய முடியாதது. ...
கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம். மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 74) இவர் நேற்று காங்கேயம் பாளையம், மருந்து கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் பலியானார். ...
கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ரேணுகாதேவி (வயது 21)இவர் செங்காளியப்பன் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு ...
கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு தண்டவாளத்தை ஒட்டி இளம்பெண்ணும் ,ஒரு வாலிபரும் கட்டிப்பிடித்தபடி பிணமாக கிடந்தனர்.இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தவர்கள் சூலூரைச் சேர்ந்த அஜய் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29)கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஹர்ஷினி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனைவி ஹர்ஷினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கார்த்திக் தனது மனைவி மற்றும் ...













