ஜம்முவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயம். ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கிச் சென்ற பேருந்து இன்று காலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் ...

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதி படைத்த கைதிகள், மிக ரகசியமாக செல்போன்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதன்பேரில், அவ்வப்போது சிறை சோதனைக்குழு காவலர்கள், அதிரடி சோதனையை நடத்தி செல்போன், சார்ஜர்களை ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள சொக்கம்பாளையம், காந்தி காலனி சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48)கூலி தொழிலாளி.நேற்று இவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது. இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது ...

கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள கஞ்சம்பட்டி, நடுக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலிதொழிலாளி. அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 23 )குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது தந்தையிடம் புதிதாக பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அதற்கு அவரது தந்தை மறுத்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன் அவரது ...

கர்நாடக மாநிலம் மைசூருவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தில் இன்னோவா கார், பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இன்னோவா காரில் இருந்து ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், மோசமாக சேதம் அடைந்த காரில், உயிரிழந்த பயணிகளை  சம்பவ இடத்தில் ...

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது விவசாயியான ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி தகவலறிந்த கோபி நகராட்சி தலைவர் ...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முல்லை நகர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி(54). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்தது. இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் ...

மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன்பின், ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சாய்பாபு (வயது 65) லாட்ஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், சேரன் நகர் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் வேன் இவர் மீது மோதியது. இதில் சாய்பாபு படுகாயம் அடைந்து அதே ...