ஜம்முவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து… 10 பேர் பலி – 50க்கும் மேற்பட்டோர் காயம்..

ம்முவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயம்.

ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கிச் சென்ற பேருந்து இன்று காலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களும் ஜம்மு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் அசோக் சவுத்ரி கூறியுள்ளார்.

ஜம்மு மாவட்டத்தில் கத்ராவிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜஜ்ஜார் கோட்லி பாலத்தில் உருண்டு கவிழ்ந்தது” என்று ஜம்மு எஸ்எஸ்பி சந்தன் கோஹ்லி தெரிவித்தார்.

மேலும், மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. SDRF குழுவும் சம்பவ இடத்தில் உள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பணிகளை ஏற்று சென்றுள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது அம்மாநில அரசு.