அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…12 இடங்களில் அனலாய் தெறிக்குது வெயில்…100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு..!

க்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனை தொடர்ந்து மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர், நாகை, தஞ்சை, ஈரோடு ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.