திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி.காா்னா் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மழைநீா் அதிகம் தேங்கியிருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தை தாங்கி நிற்கும் தூணுடன் பக்கவாட்டுச் சுவா் சிமென்ட் கற்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. இதனால், பாலம் சற்று இறங்கியுள்ளது. ...

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் ...

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்ததால் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி மலை ரயில் சேவை பாதிக்கபட்டது.மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு ...

சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த ...

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி ...

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...

நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது மற்றும் நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார் இதனை கண்டித்து தேவாலா உட்கோட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தைப் புலியை ...

நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாலயம் பஜார் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினரும் நகரமன்ற தலைவருமான சிவகாமி தலைமையில் நடைபெற்றது, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை ...

கோவை மாநகரதெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணிபுரிந்தவர் சண்முகம். இவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் இதேபோல வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாகநியமிக்கப்பட்டுள்ளார.கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணியாற்றி வந்த சண்முகத்திற்கு பதிலாக சரவணகுமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு ...