தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி ...
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...
நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது மற்றும் நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார் இதனை கண்டித்து தேவாலா உட்கோட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தைப் புலியை ...
நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாலயம் பஜார் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினரும் நகரமன்ற தலைவருமான சிவகாமி தலைமையில் நடைபெற்றது, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை ...
கோவை மாநகரதெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணிபுரிந்தவர் சண்முகம். இவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் இதேபோல வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாகநியமிக்கப்பட்டுள்ளார.கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணியாற்றி வந்த சண்முகத்திற்கு பதிலாக சரவணகுமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு ...
தமிழகத்தில் உள்ள நகரங்களில் திருச்சிக்கு இந்த ஆண்டுமுதலிடம் கிடைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்வச் சா்வக்சன் விருதுக்காக ஆண்டுதோறும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில், திருச்சிக்கு தேசிய அளவில் 112-ஆவது இடம் கிடைத்துள்ளது. ...
திருச்சியில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ முகாம்.திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு ஆகியோா் தலைமை வகித்தனா். இக்கூட்டத்தில், ஆவூா் பிரிவு ...
சென்னை: நிலம், பணம், சொத்து தகராறு உட்பட சிவில் பிரச்சினைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பணம், நிலம், சொத்து, ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர்கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், அவர்களது கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் ...













