ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் அரசு செய்து கொள்ளாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை ...
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருப்பதாகவும், தன் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்து கொள்ளலாம் என்றும் இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ...
சென்னை : மணலியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடிகால்கள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொருக்குப்பேட்டை ...
நேற்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசியல் கட்சி தொண்டர்கள் அவரது கார் மீது கல் மற்றும் கொடி கம்பங்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் ...
புதுடில்லி: இந்தியா முதலிடம்… ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். பால் உற்பத்தி மதிப்பானது கோதுமை, அரிசி உற்பத்தி மதிப்பைவிட அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள தியோதா் என்ற இடத்தில் பால் பொருள்கள் வளாகத்தையும் ...
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: “முகக்கவசம் அணிய வேண்டும் ...
பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். இறுதியாக சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ...
தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் ...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் வாழ்க்கை நிலைமையை புரட்டிப் போட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலை மூடல்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கியுள்ளது. இதனால், அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ...
குஜராத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 ...













