பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்-அண்ணாமலை பங்கேற்பு..!!

சென்னை : தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐதராபாத் சென்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவது குறித்து, இதில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சி தலைமை அழைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐதராபாத் சென்றுள்ளார்.