நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ..!!

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நாளை பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மூ சென்னை வருகிறார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் அவர் அவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார்.