இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பழனிச்சாமி தரப்பு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். தொண்டர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் ...

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ...

ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்குமாறு பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஒபிஎஸ்-ஐ கட்சியின் அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுக்குழு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் `ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது ...

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நிக்க வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்தார். கட்சி விதி 35-இன் படி ஓபிஎஸ் ...

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்தது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...

கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசால் பாவேந்தர் பாரதி தாசன் விருது பெற்ற செந்தலை கவுதமனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற உள்நாட்டு போராட்டத்தை பார்க்கும்போது தமிழர்களை ...

அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து நின்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...

அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மேடை ஏறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் நடைபெற்று வருகிறது. 9.15 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பொதுக்கழு நடத்த நீதிபதி அனுமதி வழங்கி ...

அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன் தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக ...

அதிமுக பொதுக்குழுவை இன்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்த, பொதுக்குழுவும் செயற்குழுவும் தற்போது தொடங்கியுள்ளது. இதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு, இன்று காலை 9 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ...