குட்கா, கஞ்சா, மது, சிகரெட் தடை செய்யக் கோரி கோவையில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக இன்று பாமக சார்பில் குட்கா, கஞ்சா, மது, சிகரெட் ,ஆகியவற்றை தடை செய்யக் கோரியும், வரும் தலைமுறையை போதைப் பழக்கத்திற்கு ஆளாக வண்ணம், தடை செய்ய வேண்டும் என்று கூறி, பாமக கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக செய்தி தொடர்பாளர் தமிழ்வாணன் கோவிந்தன், கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் ரமேஷ் உட்பட, ஏராளமானோர் பங்கு பெற்றனர். பின்னர் பாமக கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் பேசுகையில், தமிழகத்தில் மாணவர்கள் கஞ்சா, குட்கா, புகையிலை வஸ்துக்கள் உட்பட ஏராளமான போதை பொருட்களை பயன்படுத்தி, படிக்கும் காலத்திலேயே படிப்பை மறந்து, உடல் நலத்தை பேண மறந்து, குறுகிய வயதிலேயே போதைக்கு அடிமையாகி இறந்து போகும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தான் அதிகமான இளம் விதவைகள் இருக்கின்றார்கள். இது போன்ற சூழ்நிலையை, தகுந்த நடவடிக்கை எடுத்து தமிழக அரசு போதைப் பொருட்களுக்கு எதிரான புதிய சட்டத்தினை இயற்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலத்தினை காக்க வேண்டும், என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகின்றது என்று கூறினார்.