நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம்

நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம்.

 

கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!!

கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்ந பக்தர்களிடம் வாகனம் நிறுத்தும் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் அதிக கட்டணம் வசூல் செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்ந பக்தர்களிடம் வாகனம் நிறுத்தும் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் அதிக கட்டணம் வசூல்
செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையிலான பா.ஜ.க வினர் பேரூர் கோவில் மற்றும் பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் சென்று அதற்கான விளக்கம் கேட்டனர்.

அப்போது,வாகன பார்க்கிங் கட்டணத்திற்கான டோக்கனில் சீரியல் நம்பர் இல்லாமலும், வசூல் செய்த கணக்கை பதிவு செய்யாமலும் அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்த அதிக கட்டணம் வசூல் செய்த பணம் குறித்த கணக்கை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும்,எந்த ஒரு கணக்கும் சரி வர அரசுக்கு தெரியாமல் இது போன்று வசூல் செய்தது குற்றம் எனவும்,முறையான கணக்கை வங்கி சலான் மூலம் செலுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர்,அங்கு இருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்