முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை ...

சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், ...

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் இதில் பங்கேற்கிறார். ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் ...

பசுவின் கோமியத்தை(சிறுநீர்) லிட்டர் ரூ.4க்கு வாங்கும் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கிவைத்தார். தனது வீட்டிலிருக்கும் பசுக்களின் சிறுநீரை 5 லிட்டர் விற்பனை செய்து ரூ.20 பெற்றுக்கொண்ட முதல்வர் பூபேஷ் பாகல், அந்தப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஹரேலி ...

தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ...

மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை ...

சென்னை: நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ...

சென்னை: “கடந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும், இந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை காண முடிந்தது. இது தமிழக மக்களுக்கு, இனிய உணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க அன்றைய தினம், பிரதமர் வருகையையொட்டி, நேரு விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர். இசைக் கலைஞர்கள், நடனக் ...

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 5.10 மணி அளவில் சென்னை வந்தார். சதுரங்க கட்ட கரை ...

சென்னை: ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் பின்னர் ...