தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார்.
உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது. இது தொடரை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது தமிழக அரசையும் தமிழகத்தையும் அவர் வெகுவாக பார்ட்டினார். மேடையில் அவர் பேசியதாவது:- “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என விருந்தோம்பல் குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
செஸ் விளையாட்டு போட்டியில் பிறப்பிடம் இந்தியாதான், இப்போது செஸ் போட்டி அதன் பிறப்பிடத்திலேயே நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது, செஸ் விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்தவர்களை நான் பாராட்டுகிறேன், இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் செஸ் போட்டி நடப்பது பெருமை அளிக்கிறது, சர்வதேச செஸ் போட்டி அதன் தாயகத்தில் நடக்கிறது, தமிழகத்துக்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்புள்ளது.
இதுவரை இல்லாத வகையில் அதிக வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் விளையாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு கோயில்கள் உள்ளன, சதுரங்க வல்லபநாதர் கோயில் தமிழகத்தில் தான் உள்ளது, இந்தியாவின் செஸ் தலைநகராக சென்னை விளங்குகிறது, உலகின் மிகவும் பழமையான மொழியாக தமிழ் மொழி உள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய காலம் மன நலம், உடல் நலனில் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தற்போதைய காலம் இந்தியாவுக்கு விளையாட்டின் பொற்காலமாக தொடர்கிறது.
விருந்தினர்களை கடவுளாகப் போற்றும் நாடு இந்தியா, தமிழகத்தில் பல செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியுள்ளனர், விளையாட்டில் தோல்வி என்பதே கிடையாது ஒலிம்பியாட் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் நாட்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. இது இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது இவ்வாறு அவர் பேசினார்.