சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி இருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் வகையில் அவர் தரப்பில் இருந்த தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்பிமான ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அதிமுகவில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து இபிஎஸ் ஓபிஎஸ் ...

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ...

மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன், ...

இனி வருடத்திற்கு இது 12 மட்டும் தான். மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு.. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது ...

கடலூர்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

டெல்லி : இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று தொடங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ...

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அங்கு முகாமிட்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி என்பவர், ‘ நான் உங்களின் ரசிகன். என் வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா? எனக் கேட்டவுடன், அரவிந்த் கெஜிரிவாலும் அவரது வீட்டிற்குச் ...

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெரும்பாலும் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் நேரடி ஆதரவின் கீழ் இவர் களமிறங்குவதால் கார்கேவிற்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது. தலைவர் ...

உலகிலேயே செல்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலக்ட்ரானிக்கல் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இதனால் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களை ...

குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ஜனதா கட்சியை சேர்ந்தவர் வக்கீல் அஸ்வினி உபாத்யாய். இவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க ...