தமிழக சட்டப்பேரவை ஓபிஎஸ், இபிஎஸ் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்-சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை..!

பிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.

மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக். 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்” என்றார்.

மேலும், ” அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்பது தொடர்பாக ஆய்வில் உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.