மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் புகார் அளிக்கலாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு ருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து போதை விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போதைப் பொருள் புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 169 டன் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல்
முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மூலம் கஞ்சா தமிழகத்திற்கு
ஊடுருவுகிறது.

அதனையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொன்னையில் மருந்து இல்லாததால் மருத்துவர்கள் பணியிடமாற்றம் என்பது உண்மையில்லை. ஆய்வு நடத்திய போது அந்த சுகாதார நிலையத்தில் மருந்து இல்லை. கடந்த 1 மாத காலமாக மருத்துவ அதிகாரி அருகில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு சென்று மருந்து வாங்கவில்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது முதலமைச்சரின் ஆணைப்படி மருத்துவர்களிடம் பணி மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 32 மருந்து கிடங்கில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் யாருக்காவது சந்தேகமிருந்தால் நேரில் சென்று சந்தேகத்தை சரி செய்து கொள்ளலாம். மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.