இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டு வரும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை ...
சென்னை: “வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழா ...
ஊட்டி: உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக ...
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கில் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜன.10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் கடந்த2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ‘திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்பந்தம் காரணமாக கூட்டணி கட்சிக்கு நாம் ...
அமீர் கான் தனது புதிய அலுவலகத்தில் இந்து முறைப்படி பூஜை நடத்தியது, ஷாரூக் கான் வைஷ்னோ தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்ததை குறிப்பிட்டு, ஒருவர் எந்த கடவுளையும் வணங்க முடியும். ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் பதான் ...
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது. ...
கோவை: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்பி ராசா கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பாக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையெகப்படுத்த அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சிலர் மக்களிடயே ...
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது பேசிய எஸ்.பி வேலுமணி “உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக செய்த மிகப்பெரிய சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என சொல்கிறாரோ அதை தான் ...
மேற்கு பர்த்வான்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றார். அசில்சுவை முன்னாள் மேயர் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், ஏழை எளிய ...