டெல்லி: மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம், அருணாச்சலபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். அதன்படி மகராஷ்டிரா மாநில புதிய ஆளுநராக ரமேஷ் பாசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த பகத் சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவார் திரௌபதி முர்மு ரமேஷ் பாசிஸை புதிய ஆளுநராக நியமித்துள்ளார். ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில ஆளுநர் சவுகான், மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, ஜார்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன், அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாச்சல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply