கோவை மாவட்டம்: கொண்டையம்பாளையம் ஊராட்சியின் 9 வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 631000 ரூபாய் மதிப்பில் அமைக்கபட்டுள்ள கான்கிரீட் சாலை தரமில்லை என்று அமைக்கும் போதே அந்த பகுதி மக்கள் ஆட்சேபனை
அதனை மீறி அந்த சாலையினை அமைத்தனர். பின் அந்த பகுதி பெண் ஒருவர் அந்த சாலையின் தரத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சாலை 1 வருடம் கூட தாங்காது, எனவே அந்த சாலையின் தரத்தை ஆய்வு செய்தபின் அந்த ஒப்பந்ததாரர்க்கு பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் பணம் வீணாக கூடாது எனவும் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த அந்த 9-வது வார்டு லட்சுமி கார்டன் பகுதி திமுக கவுன்சிலர் மோகன் மற்றும் சில திமுக நிர்வாகிகள் அந்த புகார் கொடுத்த பெண் வீட்டிற்கு சென்று தாகாதவாறு பேசி சண்டையிட்டுள்ளனர். இதனை பார்த்து தடுக்க வந்த நபரை திமுக கவுன்சிலர் தாக்கியுள்ளார். அந்த திமுக பெண் நிர்வாகி தனது செருப்பால் அந்த நபரை தாக்கியுள்ளார். அந்த பகுதி மக்கள் அவர்களை தடுத்து தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர். தாக்கிவிட்டு திமுகவினர் மருத்துவமனையில் அனுமதியாகி பொய் வழக்கு கொடுத்துள்ளனர் .
Leave a Reply