வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் உற்சாக வரவேற்பானது, அந்நாட்டின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதி என்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் கூறப்படுவதாவது: ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் போராட்டத்தில், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், மோடியும் இணைந்து ...

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அரசு சார்பில் இரவு உணவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்தார். இந்த உணவு விருந்தில் இந்திய தொழில் அதிபர்களும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விவரங்களை பார்க்கலாம். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்தால் முதல்வரின் குடும்பம் கூட சிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல். உண்மையில் நடந்தது என்ன? விசாரணையில் யாருக்கு தண்டனை கிடைக்கும்? அதற்கு வழக்கறிஞர்களின் விளக்கம் என்ன? கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் ...

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் ...

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துளளார். மணிப்பூர் ...

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள ...

சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...

சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.   ...

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் யோகா செய்து அசத்தினார். முன்னதாக அவர் விழாவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை கவனத்தை ஈர்த்தது. ...

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது ...