அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ரைட் நடத்தினார்கள் – அம்மன் கே அர்ச்சுணன் எம்.எல்.ஏ .பேட்டி..!

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் இன்று நடக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் .இது குறித்து அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியல் காழ் புணர்ச்சிகாரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். இதை திசை திருப்புவதற்காக திமுக அரசுஇந்த லஞ்ச ஒழிப்பு சோதனையை திட்டமிட்டு 3-வது தடவையாக நடத்துகிறார்கள்.அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். விரைவில் கொந்தளித்து எழுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.