முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது எனவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை விட ‘இந்தியா’ கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைப்பயணம் ...

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது. அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார். மேலும் அவர் ...

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது தொகுதி பொதுமக்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான ...

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இருதரப்புப் பயணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி கிரீஸுக்குச் செல்கிறார். 40 ஆண்டுகளில் ...

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பணியாளர் சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த் தைக்குப் பிறகு அமைச்சர் முத்து சாமி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ...

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ...

தமிழக முதலமைச்சர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளவர், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என ...

விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. வாழைப்பழம், நெல் போன்றவற்றுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது, ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பிரிவினை ...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். நேற்று மதுரை வந்த அவர் இன்று காலை ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு தி.மு.க.-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நகருக்குள் நேற்று  மதியம் 1 ...

வாஷிங்டன்: பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது எனவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ...