கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்து லட்சுமி கூறியிருப்பதாவது:- சூடோமோனாஸ் என்பது எதிர் உயிர் பாக்டீரிய வகையாகும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பாக்டீரிய மற்றும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து நன்மை செய்கிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் பயிரில் குலைநோய்,இலைக்கருகல் நோய், கேழ்வரகில் ...

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் ...

கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்தவர் திருமலை கண்ணன் .சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி மணிமேகலை ( வயது 37 )இவர்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், குலமங்கலம் பக்கம் உள்ள தாயம்பட்டி. திருமலை கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். மணிமேகலை டெய்லர் வேலை செய்து வருகிறார்.தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் ...

கோவை செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து( வயது 33) இவர் பேஸ்புக்கில் இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டு வகையில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் புகார் செய்தார் .போலீசார் நாச்சிமுத்து மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதேபோல சரவணம்பட்டி ...

கோவை மாவட்ட தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் போலீசார் நேற்று பாப்பம்பட்டி திருமுருகன் நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1532 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த காருக்கு பைலட்டாக வந்த ...

புதுடெல்லி: மக்களவையில், ‘பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்திருத்த மசோதா’ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, மாநில உரிமையும் பறிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற நிலைக்குழு அனுப்ப வலியுறுத்தி உள்ளன. பாஜ தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே கூட்டாட்சி என தத்துவத்தை மீறி, மாநில அரசிகளிடம் ...

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் ...

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார். 36வது இடத்தில் உள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், 63 வயதான அமைச்சர் இந்த பட்டியலில் 37 வது இடத்திலும், 2020 இல் 41 வது இடத்திலும், ...

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 11-ம் தேதி நாட்டின் குடியரசு துணைத் ...