சென்னை: அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் சுகாதாரத்துறை பணியாளர்கள் பொதுமக்களுக்கு செலுத்தும் தடுப்பூசியை காலை 11 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை, தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை,சிறப்பு காவல் படை, ஊர்காவல் படை, துணை ராணுவம் உட்பட 4,363 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.இது தவிர 10 வேன்களில் அதி விரைவு படையினர் நகர் முழுவதும்24 மணி நேரமும் வாகனத்தில் ரோந்து சுற்றி ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் காலை முதல் இரவு வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் தேதி நெருங்க,நெருங்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் ஆங்காங்கே ...

இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 ...

கோவை போத்தனூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ( வயது 56) நூல் வியாபாரி இவர் தனது செல்போனில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருக்கிறதா? என பார்த்து உள்ளார். அப்போது ஒரு மணி நேர பகுதி நேர வேலை இருப்பதாக வந்த லிங்கை நடராஜன் தொடர்பு கொண்டபோது தாங்கள் முதலீட்டுக்கு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் ,குட்டை தோட்டம், பகுதியை சேர்ந்தவர் சின்ன கருப்பன் . இவரது மகன் குருசாமி (வயது 38) கூலி தொழிலாளி. இவர் நேற்று சாய்பாபா காலனி நாராயண குரு ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இவரை வழி மறித்து அரிவாளை காட்டி மிரட்டி ...

கோவை ஒண்டிப்புதூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி பக்கம் உள்ள வி. சி. ஆர். கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறைக்கு சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு ...

கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30 மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  ...

திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் மராமத்து வேலைகள் நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்ட சுவற்றுக்கு நேற்று காலை எழுந்ததும் ...