வந்தே பாரத் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நாட்டின் தனது முதல் சேவையை தொடங்கியது. டெல்லி வாரணாசி இடையே 760 கிலோமீட்டர் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் காலை 6 மணிக்கு புது டெல்லிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது. கான்பூர் அலகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் ...
கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ...
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு வரும்போது பொதுமக்கள் அநாகரிகமான உடைகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல ...
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 80 இலட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி பயணித்து உள்ளார். அப்போது தான் வைத்து இருந்த கைப் பைக்கு டிக்கெட் எடுக்காமல் ...
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. நீரவ் மோடி மோசடி, மற்றும் பணமோசடி விசாரணையை இந்தியாவில் இனி எதிர்கொள்ள வேண்டும். மேலும் அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய ...
பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 2வது முனையத்தின் அழகு, பிரமிக்க வைக்கிறது. கர்நாடகா அரசின் சார்பில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பேகவுடா சிலை திறப்பு விழா, இந்த விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் ...
கோவை வழித்தடத்தில் கா்நாடக மாநிலம் விஜயபுரா-கேரள மாநிலம் கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நவம்பா் 21-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி வரை திங்கள்கிழமைகளில், கா்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11 ...
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது. காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை போலீசார் சேகரிக்க ...
அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்… கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று ...