மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு

மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிரபலமான பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி அளவில் கரும்புகள் வெளியேறி உள்ளது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிகழ்வு இடத்திற்கு பீளமேடு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்தனர். இதனை அடுத்து அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.