நேர பிரச்சனையால் தகராறு: பேருந்தை மோத விட்டு ஊழியர்கள் வாக்குவாதம் – கோவையில் பரபரப்பு
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நேர பிரச்சனையால் தகராறு. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி தடி போன்ற குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது உள்ளது. இந்நிலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேர பிரச்சனையால் பேருந்துகளை மோத விட்டு ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். பின்னர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்று விட்டனர். மேலும் அப்பகுதியில் காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கோவை மாவட்டத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையான கணிசமான எண்ணிக்கையில் தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன. முந்தி சென்று பயணிகளை அதிகளவில் ஏற்றுவதில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே கடும் போட்டி எப்போதும் கோவையில் நிலவும். பிரதான பேருந்து நிலையங்களான காந்திபுரம் சிங்காநல்லூர் உக்கடம் போன்ற பகுதிகளில் பயணிகளை அதிகளவில் ஏற்றிச் செல்ல தனியார் பேருந்துகளிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கம். கடந்த நாட்களில் பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது, பயணிகளை தாக்குவது, அடி தடி போன்ற குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேர பிரச்சனையால் பேருந்துகளை லேசாக மோத விட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். பின்னர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்று விட்டனர். இதனிடையே தனியார் பேருந்துகளின் போட்டி பொறாமைகளுக்கு இடையே பொது மக்களின் பாதுகாப்பு ஊசலாடுகிறது. அதே சமயம் இவர்களிடையேயான பிரச்சனை அந்தப் பேருந்துகளில் பயணிப்போரை சிரமத்திற்கு ஆளாக்கி விடுகின்றன. எனவே காவல்துறையினர் இவர்களை அழைத்து அறிவுரை வழங்குவதோடு எச்சரிக்கையும் விடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களிடையேயான போட்டி பொறாமையில் பொதுமக்களின் உயிருக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கடும் நடவடிக்கை எடுத்து விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Leave a Reply