பயணிகளின் கவனத்திற்கு… பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்..!

கோவை:
திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை (17-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் – வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) நாளை (17-ந் தேதி வியாழக்கிழமை) 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குப் புறப்படும்.
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் (எண்:12678) நாளை (17-ந் தேதி வியாழக்கிழமை) 2½ மணி நேரம் தாமதமாக காலை 11.40 மணிக்குப் புறப்படும்.

நாகா்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் – கோவை ரயில் (எண்: 16321) நாளை மறுநாள் (18-ந் தேதி வெள்ளிக்கிழமை) 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்குப் புறப்படும்.
திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி – பாலக்காடு ரயில் (எண்: 16843) நாளை (18-ந் தேதி வெள்ளிக்கிழமை) 2½ மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.