கோவையில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய உதவும் புதிய செயலி- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிமுகம்..!

கோவை மாநகரில் உள்ள சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு ,உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கோவை நகரில் எந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதை “கூகுள் மேப்” மூலம் அறிந்து கொள்ள ரோடு “ரோடுஈஸி’ என்ற புதிய செயலியை கோவை மாநகர போலீஸ் கமிஷன் பாலகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். .இது கோவையில் வாகன ஓட்டிகளுக்கு கோவை சாலைகளில் நெரிசல் இல்லாமல் பயணிக்க உதவும் திட்டமாகும். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னையில் இது போன்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் இது அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துக்கு நகரின் போக்குவரத்து விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்து தெரிவிக்கப்படுகிறது. சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடை, மழை நீர் தேக்கம், மேம்பால பணிகள் ஆகியவை குறித்து தகவல் தெரிவிப்பார்கள் .அதன் அடிப்படையில் எளிதாக செல்வதற்குரிய சாலை விபரங்களை தெரியவரும். இதனால் சிரமம் இன்றி போக்குவரத்தை இயக்க முடியும். உள்ளூர்மக்களும் இதில் பயன்பெறுவார்கள். இதன் மூலம் நேரம் மிச்சமாகும் .பொதுவாக கோவை நகரில் அவிநாசி ரோடு, உக்கடம் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது .ஆம்புலன்ஸ் வேன்கள் எளிதாக செல்ல “க்ரீன் காரிடர்” திட்டத்தை செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை நகரில் பெண்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகிறார்கள் .இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 4 ஆயிரம் பெண்கள் கலந்துகொள்ளும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வருகிற 19ஆம் தேதி நடக்கிறது காலை 8 மணிக்கு நடக்கிறது இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து புறப்பட்டு கொடிசியா வரை இந்த வாகன பேரணி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.