புத்தம் புதுப்பொலிவுடன் மீண்டும் வந்தது சிறுகுன்ற தங்கும் விடுதி- வனவிலங்குகள், பறவைகளை கண்டு ரசிக்கலாம்..!

கோவை மாவட்டத்தில் கூற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று. இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முதி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷன நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். வால்பாறையில் யானைகள் கூட்டம், காட்டெறுமை, காடமான், இருவாச்சி பறவை மற்றும், பல்வேறு அறியவகை பறவைகளை கண்டு ரசிக்கலாம். வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் தனியார் தங்கு விடுதிகள், ஓட்டல்களில் தங்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் சிறுகுன்ற பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான விடுதி இருந்தது. இதனை புதுப்பித்தால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுகுன்ற அரசு விடுதியை புதுபிக்க முடிவு செய்தனர். ரூ.16 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை புத்தாண்டின் முதல் வரத்தில் செல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்கு ரூ.16 லட்சம் செலவில் சிறுகுன்ற பகுதியில் இருந்த விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறை டவுனில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்து உள்ளது. 4 அறைகளை கொண்ட இந்த விடுதியின் வாடகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் சின்ன கல்லாறு, நீர் வீழ்ச்சி, செக்கல்முடி, சோலையார் அணை, பு நல்ல முதி பூங்சோலை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும். மேலும் இந்த பகுதியில் இருந்து அறியவகை பறவைகள், மயில், இருவாச்சி பறவை, யானைகள், காட்டெறுமை, காடமான் ஆகியவற்றை விடுதியில் இருந்து கண்டு ரசிக்க முடியும். விடுதிக்கான முன்பதிவு ஆன்லை மூலம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.