2023ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா ஈர்க்கக்கூடும், அதே போல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பணவியல் கொள்கை இறுக்கம் காரணமாக உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தாலும், உக்ரைன் போர் கவலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் ...

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை திருடி செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள்…. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் ...

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 9-வது நாளான நேற்று டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பிரபலமான பஞ்சாப்பை சேர்ந்த கோல்டன்சிங் என்கின்ற ராஜேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது விவசாய பொதுமக்கள் சமைத்து வைத்திருந்த உணவை அவர்களோடு அமர்ந்து ...

கோவை: கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:- ...

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை – மங்களூர் விரைவு ரயில் ( எண்:16159) இன்று முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும். காரைக்கால் – எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: ...

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் மைசூர் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து டிசம்பா் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ...

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, வரும் 24ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் சொந்த ...

Dகோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து ...

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை ...

கோவை மாவட்ட வருவாய் அலகில் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு சென்றுள்ள வட்டாட்சியர்களுக்கு பதிலாக துணை வட்டாட்சியர்கள் 7 பேருக்கு வட்டாட்சியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சரவணகுமாா், கோவை தெற்கு நகர நிலவரி திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை ...