நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்… இந்தியாவிற்கு விரைவில் வருகிறது..!

நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நீருக்கு அடியில் இயங்கும் மெட்ரோவை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கார்பரேஷன் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது. இதன் உருவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில், அவை அனைத்தும் தற்போது நிறைவுடையும் நிலையை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள எஸ்பிளனேடு – சீல்டா இடையேயான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் நாட்டின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தியில் பேட்டி அளித்த சிவில் கேஎம்ஆர்சி-யின் பொது மேலாளர் ஷைலேஷ் குமார் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது, “விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நீருக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் 2023 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். தற்போது சில புனரமைக்கும் பணிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சிக்கல்களினாலேயே இந்த பணிகள் தாமதாகக் காரணமாக உள்ளன. அவை அனைத்தும் விரைவில் களையப்படும்” என்க்கூறியுள்ளார்.

மேலும், “சில வெளிநாட்டு கலைஞர்களுடன் இணைந்து நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கங்களை உருவாக்கி வருகின்றோம். இத்துடன், வெளிநாட்டு (ஜெர்மன்) எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றைக் கொண்டே சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.