கோவை பஸ் நிலையங்கள்,ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ஒட்டல், கடைகள் திறக்க அனுமதி – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவையில் பஸ் நிலையங்கள். ரயில் நிலையம் பகுதிகளில் இன்று முதல் 24 மணி நேரமும் ஓட்டல்கள்-கடைகள் திறந்து வைக்க அனுமதி. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் கடந்த ஆண்டு 232 விபத்து வழக்குகள் பதிவானது. இதில் 234 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு258 வழக்குகள் பதிவானது .இதில் 267 பேர் இறந்தார்கள். கடந்த ஆண்டு பல்வேறு தொடர் குற்றங்களுக்காக 69 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தாண்டு 87 பேர் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு 828 திருட்டு வழக்குகள் பதிவானது. இதில் 2 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1444 திருட்டு வழக்குகள் பதிவானது. இதில் 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது..புத்தாண்டையொட்டிஇன்று 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் மேம்பாலங்கள், வ .உ. சி. பூங்கா நேரு ஸ்டேடியம் ஆகியவை மூடப்படும்.கோவையில் 20 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும்.குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விபத்து இல்லாத நாளாக புத்தாண்டு தினத்தைகொண்டாட வேண்டும் .கோவையில் இன்று முதல் பஸ் நிலையங்கள். ரயில் நிலையங்கள்,அரசு மருத்துவமனை அருகிலுள்ள கடைகள் ஒட்டல்கள், பேக்கிரிகள். திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது..இவ்வாறு கூறினார்.