தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்ககூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், ...

உலக காது கேட்கும் நாள் ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘வாழ்நாள் முழுவதும் கேட்க கவனமுடன் கேளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காது கேட்கும் திறன் குறைபாடுடன் வரும் நோயாளிகளுக்கு, முறையான பரிசோதனையுடன், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், கேட்கும் ...

சார்பதிவாளர் அலுவலகங்களில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க ...

சோமனுார் : கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி, 52 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிலிருந்து விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில், புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கடந்த, ஜன., 9ம் தேதி ...

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த ...

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை ...

வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, ...

மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. வரி வசூல் விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில், 2010ம் ஆண்டு முதல் 2022 வரை, வசூல் செய்யப்பட்ட வரித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை ...

டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை ...

திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினைப் ...