உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலம் தான்!! தமிழில் தகவல் தரவேண்டுமென்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை.!!

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் அதன் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை தமிழில் தர ஐகோர்ட்டுக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆர்டிஐ தொடர்பான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதிலளிக்க முடியும். எனவே, தமிழில் பதில் தர வேண்டுமென்ற மாநில ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழில் விபரத்தை கொடுக்க வேண்டுமென்ற மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, மனு மீதான விசாரணையை ஏப். 28க்கு தள்ளி வைத்தனர்.