நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி… 8 மடங்கு கட்டணம் உயர்வு…!

சாலைகளில் 15 வருடங்களுக்கு மேல்பழமையான வாகனங்கள் பயணிப்பதால்தான் காற்றுமாசு அதிகமாகிறது என புகார்கள் வருகிறது.

இந்த புகாரின்படி 15 வருடங்கள் பழசான வாகனங்களை அழிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது இதற்கான பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தினை அதிகரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் காற்றுமாசு அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக 15 வருடங்கள் ஆகிய பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான் காற்று மாசு அதிகரிக்கிறது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் 15 வருடங்களான பழசான வாகனங்களை உபயோகிக்க வேண்டாம் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 10 வருடங்கள் பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 15 வருடங்கள் பழைய வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதை தடுக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அடிப்படையில் ஏப்ரல் 1 முதல் 15 வருடங்களுக்கும் மேலான வாகனங்களின் பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான விலையை உயர்த்த இருக்கிறது. MoRTH வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படியில் புதிய விலைகள் தற்போதைய விலையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும். வரும் ஏப்ரல் 2022 முதல் இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பொருந்தும். எனினும் இத்தீர்ப்பு டெல்லியில் பொருந்தாது.

அங்கு முறையே 15 மற்றும் 10 வருடங்களுக்கும் மேலான அனைத்து பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மறுபதிவுக்கு பொருந்தாது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஏப்ரல் 1 முதல் 15 வருடங்கள் பழமையான காரை புதுப்பிப்பதற்கு தற்போதைய கட்டணமான 600 ரூபாயுடன் ஒப்பிடும்போது, 5,000 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 300 ரூபாய்க்கு பதிலாக, 1,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பின் இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் விலை 15,000 ரூபாய்க்கு பதிலாக 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 4 சக்கர வாகனங்களுக்கான விலையை தற்போதைய விலையை விட 4 மடங்குக்கு அதிகமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.