என்ன.. இத்தனை பொருள் கிடைக்குதா… பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் கூடுதல் தள்ளுபடி- 10 கடைகளாக அதிகரிக்க முடிவு.!!

மக்களுக்கு குறைந்தவிலையில், தரமான மருந்துகளை, வழங்கி வரும் பிரதம மந்திரி மக்கள் மருந்துகத்தில் இனிமேல் மக்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் புரோட்டீன் பவுடர், சத்துமாவுகள், நோய்எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், சத்துமாவு சார்ந்த பொருட்களும் கிடைக்கும்.

தற்போது நாடு முழுவதும் பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷதி பாரியோஜனா எனப்படும் பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகத்தில் 1451 வகையான மருந்துகள், 240 வகையான மருத்துவக் கருவிகள் கிடைக்கின்றன. இனிமேல் உடல்நலன் சார்ந்த பொருட்களும் கிடைக்கும்.

நாடுமுழுவதும் 8,675 பிரதமரின் மலிவுவிலை மருந்தகங்கள் செயல்படுகின்றன. தகவல்தொழில்நுட்பம் அடிப்படையில் செயல்படும் 3 சேமிப்பு கிடங்குகள் குருகிராம், சென்னை, கவுகாத்தியில் செயல்படுகின்றன. குஜராத்தின் சூரத் நகரில் அடுத்ததாகத் தயாராக இருக்கிறது.

எதிர்காலத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் மலிவுவிலை மருந்தகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 2025ம் ஆண்டுக்குள் 10,500 மலிவுவிலை மருந்தகங்களை உருவாக்கவும், 6 சேமிப்பு கிடங்குகளை உருவாக்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது

இது தவிர கிராமங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக தற்போது 39 விற்பனைபகிர்வாளர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

மத்திய ரசாயன மற்றும் மருந்துத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரதமர் மக்கள் மருந்தகத்தில் மருந்துகள் சந்தைவிலையிலிருந்து சராசரியாக 50 சதவீதம் குறைத்து விற்பனை செய்யப்படுகிது. சில மருந்துகளுக்கு 80 முதல் 90 சதவீதம் சந்தை விலையிலிருந்து குறைத்து விற்கப்படுகிறது.

பிராண்ட் மருந்துகளாக இருந்தாலும், ஜெனரிக் மருந்துகளாக இருந்தாலும், அனைத்து மருந்துகள் விற்பனையையும் ஒழுங்குபடுத்தும், தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம்தான் மருந்துகளுக்கான நியாயமான விலையை முடிவு செய்கிறது. சில முக்கிய மருந்துகளுக்கு தயாரிப்பாளர்கள் அதிகபட்ச சில்லரை விலை குறிப்பிடாமல் வழங்குகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று கோலத்தில் போக்குவரத்து சிக்கல், கொள்முதல் பிரச்சினை இருந்தகாலத்திலும் மருந்துகள் மக்களுக்கு தடையில்லாமல் வழங்கப்பட்டன. இதனால் 2020ம் ஆண்டு ஏப்ரலில் மட்டும் ரூ.52 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்பட்டன. மலிவுவிலை மருந்தகங்களில் சந்தைவிலையிலிருந்து 50 முதல் 90 சதவீதம் வரை விலை குறைவாக விற்கப்படுவதால், சாமானிய மக்களுக்கு ரூ.300 கோடிவரை சேமிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரின்போது, 900 வகை தரமான மருந்துகள், 154 வகையான மருத்துவகருவிகள் மிகக்குறைவான விலையில் வழங்கப்பட்டன. 2020-21ம் ஆண்டு பொதுத்துறை மருந்துகங்கள் மூலம் ரூ.665.83 கோடி விற்றுமுதல் நடந்துள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு ரூ.4ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.