இனி மதுபான கடைகளில்இது கட்டாயம்-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு .!!

டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த 27 வகையான பதிவேடுகளை முறையாக தினமும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.