டெல்லி: இலங்கையில் சீனா செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தானது. பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இலங்கையில் தமிழர்கள் அதிகம் ...

தொடர்ந்து 10 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. ஆயினும் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக 5 மாநில சட்டப்பேரவை ...

தமிழகத்தில் இரவு வேலை பார்க்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலன் சார்ந்து அயராது உழைக்கும் காவல் துறையினருக்கு பொதுவாகவே விடுமுறை நாட்கள் என்பது குறைவுதான். அத்துடன் அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள் என எதற்கும் விடுப்பு வழங்கப்படுவதில்லை. ...

ஏப்ரல் 1ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்வு கட்டணம் உயர்கிறது என மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிக் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ...

திருவள்ளூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ‘பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி காலத்தில் லிட்டர் 6ரூபாய் பால் விலை  இருந்ததாக தெரிவித்தார். தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிப்படி பால் விலையை 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதனால் ...

சேலம் : பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப். 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவீத கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி ...

மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தில்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகளை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வழங்கினார். நீர் மேலாண்மையில் மக்களையும் பல்வேறு தரப்பினரையும் முழுமையாக ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ...

பள்ளி வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு சென்னை: பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தவிடப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பள்ளி மாணவன் தான் பயணம் செய்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த ...

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக வங்கிகளில் கடன் பெற்று திரும்ப ...

புதுடெல்லி: அஸ்ஸாம்- மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் முதல்வர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், கான்ராட் சங்மாவும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்திட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய மாநிலமான அசாமுடன் அண்டை மாநிலங்களான, மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகியவை ...