பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு… இனி பஸ்சில் தனி படுக்கை வசதியுடன் பயணம்..!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் அல்லாத பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது 1LB, 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அதனை பொதுப் படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.