தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக முன்பதிவில்லாத பயணிகள் ரயில், முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து மீண்டும் ரயில் சேவைகளை கொரோனாவிற்கு முந்தைய நேர அட்டவணைப்படி இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இன்று ஏப்ரல் 1 ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Leave a Reply