சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் ...

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அலங்கார விளக்குகள் எல்இடி திரை மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே கோவை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் இலவச வைஃபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக Wi-Fi மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக திமுக அரசு அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் ...

அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட 37,984 பேரின் நகைக்கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 2021 ...

சென்னை: தொழில்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் ...

இந்த ஆண்டு அக்டோபா் மாதத்துக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளாா். ருவாண்டா தலைநகா் கிகாலியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் கூட்டம் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டம் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் ...

ஜூலை 1 முதல் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது. தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி ...

மத்திய அரசு முப்படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகபடுத்த அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து 25 சதவீதம் பேர் மட்டுமே அப்பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும், மேலும் ஓய்வூதியமும் கிடையாது என்ற அறிவிப்புகளால் தற்போது இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ...

டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல தொழிலதிபர் ஆனந்த மகேந்திரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள் சேர்க்க அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவார்கள். அதன் ...

கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி ...