கந்து வட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க “ஆபரேசன் கந்துவட்டி” திட்டம் தொடக்கம்-டி.ஜி.பி.சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!!

கோவை:கந்து வட்டி கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கந்துவட்டி கொடுமை காரணமாக, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் (வயது 27) என்பவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கந்து வட்டி பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள, ‘ஆபரேசன் கந்துவட்டி’ என, புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.’நிலுவையில் உள்ள, கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வாங்கியவர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட வெற்று காகிதங்கள், சட்ட விரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சுற்றறிக்கை வாயிலாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு போலீசாரின் நடவடிக்கை இல்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே, கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:- :கந்து வட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சமரசமும் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘ரவுடிகளுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ;? அதேபோல இருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் பற்றியும், உளவுத்துறை போலீசார் வாயிலாக தகவல் சேகரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கூறினர்.